R.Maheshwary / 2022 மார்ச் 31 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன் பிரதேசத்தில் அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்கள் அனைத்து, டீசல் இன்மை காரணமாக, இன்றிலிருந்து தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளனர்.
மஸ்கெலியா, பொகவந்தலாவை, கினிகத்தேனை, தலவாக்கலை மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளிலிருந்து ஹட்டனிலுள்ள பாடசாலைகளுக்கு தினமும் முன்னெடுக்கப்பட்டு வந்த பாடசாலை போக்குவரத்து சேவைகளே, இன்றிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எனவே, தனியார் பஸ்கள் மற்றும் வான்கள் போக்குவரத்து சேவைகளிலிருந்து விலகியுள்ளதால் பாடசாலை மாணவர்கள் பொது போக்குவரத்துகளில் பயணித்தமையை அவதானிக்க கூடியதாகவிருந்தது.
இதேவேளை ஹட்டன் பிரதேசத்திலுள்ள சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் “ டீசல் இல்லை” என பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026