2025 மே 05, திங்கட்கிழமை

ஹட்டனை அண்மித்த பகுதிகளில் 9 பேருக்கு தொற்று

Gavitha   / 2020 நவம்பர் 22 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டனை அண்மித்த தோட்டப் பகுதிகளில் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் மூலம், 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என, மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியும் ஹட்டன் காரியாலயத்தின் பொதுசுகாதார பரிசோதகருமான காமதேவன் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து வருகை தந்த பலருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அதில் வெலிஓயா தோட்டத்தில் மூவருக்கும் ஸ்டெரதன் தோட்டத்தில் ஒருவருக்கும், பிளக்வோட்டர் தோட்டத்தில் மூவருக்கும், அம்பத்தலாவையில் ஒருவருக்கும், கொட்டகலை டெரிக்கிளயார் தோட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இவர்கள் அனைவருமே கொழும்பில் இருந்து வருகை தந்தவர்கள் என்றும் கலுகல்ல சோதனை சாவடிக்கு அருகாமையிலேயே கொழும்பிலிருந்து பஸ்களில் வருகை தருவோருக்கு, பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறு தலைநகரிலிருந்து வருவோர் பற்றிய தகவல்களை எமக்கு அறியத்தருமாறு பொது மக்களை கேட்டுக்கொள்வதாகவும் இதன்மூலம், கொரோனா வைரஸ் பரவும் வீதத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X