2025 மே 17, சனிக்கிழமை

ஹட்டன்- கொழும்பு வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

R.Maheshwary   / 2023 ஜனவரி 10 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ர​ஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டன்- கொழும்பு  பிரதான வீதியின் கடவளை பகுதியில் பாரிய ​மரமொன்று முறிந்து வீதியில் விழுந்ததால் குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒரு வழிப்போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தொலைபேசி கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளதாகவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (9) இரவு 9 மணியளவில் மரம் முறிந்து விழுந்தமையால் 1 மணித்தியாலம் இந்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாகவும் பின்னர் பிரதேசவாசிகள் ​மற்றும் கினிகத்தேனை பொலிஸார் இணைந்து மரத்தை வெட்டி அகற்றிய நிலையில், தற்போது ஒரு வழி போக்குவரத்துக்கே பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த வீதியின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .