Editorial / 2026 மே 01 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
ஹட்டன் - டயகம வீதியில், டிக்கோயா போடைஸ் பகுதியில் கடந்த புதன்கிழமை (29) மாலை 3 மணியளவில் இடம்பெற்ற தனியார் பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் 34 பேர் காயமடைந்திருந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக நோயாளர் காவு வண்டிகள் மூலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், அக்கரப்பத்தனை வேவல்லி தோட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் எஸ். சிவபாலன் என்பவர் அன்றைய தினமே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 66 வயதுடைய பி. லூக்ஸ் என்பவர், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (01) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது இரண்டாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago