R.Maheshwary / 2022 ஒக்டோபர் 12 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஏல விற்பனையால் ஹட்டன்- டிக்கோயா நகரசபைக்கு 42 இலட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தவிசாளர் சடையன் பாலசந்திரன் தெரிவித்தார்.
ஹட்டன் நட்சத்திர சதுக்கம், பஸ் நிலையம், பொதுச் சந்தைக்கு அருகில் உள்ள 155 இடங்கள் இம்மாதம் 24ஆம் திகதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் ஏலம் விடப்பட்டதாக தவிசாளர் தெரிவித்தார்.
மேலும், குறித்த காணிகளில் நிர்மாணிக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக உள்ளூர் கொள்வனவாளர் ஒருவர் அதனை 4 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் கொள்வனவு செய்ததாகவும், தவிசாளர் தெரிவித்தார்.
இவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அனைத்து வர்த்தகர்களும் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் எனவும், அதனை மேற்பார்வையிட நகர சபையிலிருந்து அதிகாரிகள் குழுவொன்று ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்
1 hours ago
6 hours ago
8 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
8 hours ago
17 Jan 2026