Freelancer / 2023 ஜனவரி 13 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
போக்குவரத்து அமைச்சின் ஊடாக ஹட்டன் டிப்போவுக்கு வழங்கப்பட்ட புதிய பஸ்கள், புதன்கிழமை (11) மாலை முதல் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டன.
புதிய பஸ்களின் பயணத்தை அம்பகமுவ பிரதேச சபையின் தலைவர் ஜயசிங்க பண்டார, ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆரம்பித்து வைத்தார்.
அந்த பஸ்ஸை, கினிகத்ஹேன, கொத்தலஹேன மற்றும் ஹகராபிட்டிய பிரதேசத்தில் சேவையில்
இணைத்துக்கொள்ளப்பட்டது என ஹட்டன் டிப்போவின் முகாமையாளர் தெரிவித்தார்.
85 இலட்சம் ரூபாய் பெறுமதியான அந்த பஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வருமானம் ஐந்து வருடங்களுக்குள், ஹட்டன் டிப்போவின் ஊடாக, கடன் வசதிகளை வழங்கிய நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என்றும் முகாமையாளர் தெரிவித்தார். R
6 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Jan 2026