2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டன் நகரம் ‘குப்பை நகரம்’

Freelancer   / 2022 நவம்பர் 09 , பி.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டன்- டிக்கோயா நகர சபையினால் நிர்வகிக்கப்படும் ஹட்டன் நகரம் குப்பை கூழங்களால் நிரம்பிவழியும் நகரமாகியுள்ளது என அகில இலங்கை முற்போக்கு தொழிலாளர் முன்னணியின் தலைவர் பேராசிரியர் பீ. இளங்கோ தெரிவித்துள்ளார்.

ஹட்டன் நகரை பொறுத்தவரையில் மூவினங்களைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். தற்போதைய நிலைமையை அவதானிக்கும் போது ஹட்டன் நகரத்தை சாதாரண நகரமாக இனங்காண முடியாது என்றார்.

ஹட்டனில் உள்ள அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர்,

பிரதான பஸ் நிலையத்துக்குச் சென்றால் துர்நாற்றம் வீசுகின்றது. நீதிமன்றத்துக்குச் செல்லும் வீதிகளின் இரு மருங்குகளிலும் குப்பைகள் நிரம்பி கிடக்கின்றன.

தொழிலாளர் காரியாலயத்துக்கு முன்பாகவும் குப்பைகள் நிரம்பியிருக்கின்றன. துர்நாற்றமும் வீசுகின்றது. 

இவ்வாறு ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடப்பதனால் நுளம்புகள் இலகுவில் பெருக்கும்.
இதனால், டெங்கு உள்ளிட்ட நோய்கள் விரைவில் பரவும் என்றும் அவர் எச்சரித்தார்.R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .