R.Maheshwary / 2021 டிசெம்பர் 26 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன் நகரில் கலவை குறிப்பிடப்பட்டுள்ள 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
லிட்ரோ நிறுவனபிரதிநிதிகளுக்கு நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட சிலிண்டர்கள் வர்த்தக நிலையங்களில் களஞ்சியப்படுத்தப்படாமல், குறித்த விற்பனை முகவர்களின் வீடுகளில் களஞ்சியப்படுத்தப்பட்டு ஓட்டோக்கள் மூலம் கொண்டு சென்று 3,500 ரூபாய்க்கு விநியோகிக்கப்படும் வர்த்தகம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
12.5 கிலோ நிறையுடைய கலவை குறிப்பிடப்பட்ட சமையல் எரிவாயு 2,765 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டியெ நிலையில், ஹட்டன் நகரிலுள்ள சில சமையல் எரிவாயு விற்பனை முகவர்களால் இந்த மோசடி வர்த்தகம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
சந்தைகளில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு காணப்படும் நிலையில், சில வர்த்தக முகவர்கள் இந்த மோசடி வர்த்தகம் மூலம் அதிகம் இலாபமீட்டுவதாகவும் தமது வரத்த்க நிலையங்களுக்கு முன்பாக சமையல் எரிவாய இல்லை என அறிவிப்பை தொங்கவிட்டு, வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு, வேறு இடங்களிலிருந்து இந்த வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .