R.Maheshwary / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
ஹட்டன் பஸ் தரப்பிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மலசலக்கூடத் தொகுதியிலிருந்து கழிவு நீர் கசிவதால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன்- டிக்கோயா நகரசபை மூலம் அமைக்கப்பட்டுள்ள குறித்த மலசலக்கூட தொகுதியிலிருந்து அடிக்கடி கழிவு நீர் கசிவு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் ஹட்டன் பஸ் தரிப்பிடத்தை அண்மித்த வர்த்தக நிலையங்கள் மற்றும் பஸ் தரிப்பிடத்துக்கு வரும் பயணிகள் என அனைவரும் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஹட்டன்-டிக்கோயா நகரசபையின் தவிசாளர் எஸ். பாலசந்திரனிடம் வினவியபோது, குறித்த மலசலக்கூட தொகுதியை நவீனமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கழிவு நீர் வெளியேற்றத்தைத் தடுக்க விரைவாக நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026