R.Maheshwary / 2022 ஜூன் 07 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி ஹட்டன் நகரின் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்துக்கு முன்பாக மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த நிரப்பு நிலையத்துக்கு கடந்த (05)ம் திகதி 6600 லீற்றர் மண்ணெண்ணெய் கிடைத்துள்ளதுடன், அது வரிசையில் காத்திருந்த அனைவருக்கும் விநியோகிக்கபட்டிருக்கவில்லை.
இதனால் இன்றைய தினம் (7) மண்ணெண்ணெய் கிடைக்கும் என எரிபொருள் நிலையத்திற்கு வருகை தந்த மக்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் இல்லை என சம்பந்தப்பட்டவர்களால் தெரிவித்ததையடுத்து, மக்கள் ஆவேசமடைந்தனர்.
மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதற்கு முறையான முறைமை ஏற்படுத்தக் கோரி இன்று (7) காலை முதல் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்ற சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் எரிபொருள் நிலைய பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
“பிரதான வீதியை மறிக்க வேண்டாம்” என தெரிவித்த பொலிஸாரின் கோரிக்கையை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் நிராகரித்தனர். பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்தும் ஸ்தம்பிதமாகியுள்ளது. குறிப்பாக ஹட்டன் – நுவரெலியா, ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் – கண்டி போன்ற இடங்களுக்கான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.



12 minute ago
23 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
48 minute ago
1 hours ago