2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

ஹப்புத்தளையில் ஒரு ஏக்கர் மண்சரிவு: 5 குடும்பங்கள் இடம்பெயர்வு

Editorial   / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் ஹப்புத்தளை தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக ஹப்புத்தளை நிர்வாக கிராம அதிகாரி ஜகத் லியனகே தெரிவித்தார்.

  இதன் காரணமாக அபாய வலயத்தில் வசிக்கும் ஐந்து குடும்பங்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டு உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜகத் லியனகே தெரிவித்தார்.

இந்த நிலச்சரிவினால் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த இடத்தை ஆய்வு செய்ய உள்ளதாகவும், பரிந்துரை அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜகத் லியனகே மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X