Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 20 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நுவரெலியா நகரிலுள்ள பிரதான பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகள் மற்றும் நுவரெலியா நகருக்கு சுற்றுலா வரும் பாடசாலை பஸ்கள் என்பன போக்குவரத்து பொலிஸாரால் இன்று (20) கடுமையாக பரிசோதிக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்களை போதையிலிருந்து மீட்டெடுப்பதற்காக இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென நுவரெலியா பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பாடசாலை அதிபர்களின் அனுமதியுடன் நுவரெலியா பொலிஸ் மோப்பநாய் பிரிவின் ஹொலியுடன் துணையுடன் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, போதைப்பொருள் பாவனையின் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸார் மாணவர்களுக்கு தெளிவூட்டியதுடன், பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனை தொடர்பில் அறியக் கிடைத்தால் அதிபருக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .