2026 மார்ச் 19, வியாழக்கிழமை

திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு நீதி அமைச்சில் கருத்தரங்கு

Super User   / 2012 டிசெம்பர் 04 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


முஸ்லிம் ஒருவர் இறந்தால் நல்லடக்கம் செய்வதற்காக 24 மணித்தியாலங்களுக்குள்  சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதம நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி தெரிவித்தார்.

திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கான கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்கொலைஇ கொலைஇ இயற்கை மரணம் என்பவற்றை வேறுபடுத்தி அறிந்துகொள்ளும் திறன் திடீர் மரண விசாரணை அதிகாரிகளிடம் காணப்பட வேண்டும் என கூறிய பிரதான நீதிபதி சிங்கப்புலிஇ நாளுக்கு நாள் மாற்றம் அடைந்து வரும் நவீன தொழில்நுட்பம்இ விஞ்ஞான முன்னேற்றம் பற்றிய தெளிவான அறிவும் திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு அவசியமென்றும் சுட்டிக்காட்டினார்.

நீதியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு. ஏ.கே.டி.டி. அரந்தர உரையாற்றும் பொழுது திடீர் மரணமொன்று நிகழும் பொழுது பொலிஸாருடனும் நீதவானுடனும் ஒத்துழைப்பது பற்றி குறிப்பிட்டார்.

அத்துடன் தம்மால் சரிவர தீர்மானிக்க முடியாத கட்டத்தில் நீதவானின் உதவியை நாடுவதன் அவசியம் பற்றியும் இறந்தவரின் சடலத்தை புகைப்படம் பிடிப்பதன் பயன்பாடு பற்றியும் விபரித்தார்.

சட்டத்துறை சார்ந்த மருத்துவ அம்சங்கள் பற்றி கொழும்பு சட்ட மருத்துவ நிபுணர் டாக்டர். அஜித் தென்னகோன் இதன்போது விளக்கமளித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .