2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பொப் பாடகிக்கு வானொலி நிறுவன ஊழியர் தொந்தரவு

Super User   / 2012 டிசெம்பர் 05 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மல் சூரியகொட)

இலங்கையின் பொப் மற்றும் ஜாஸ் பாடகி உமாரியா சிங்கவன்ஸவுக்கு தொந்தரவு செய்வதாக கூறப்படும் தனியார் வானொலி நிறுவனமொன்றின் ஊழியரை டிசெம்பர் 14ஆம் திகதி கொழும்பு மன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் வானொலி ஒன்றின் ஊழியரான ராம்சே ஜேனூர் என்பவருக்கே கொழும்பு கோட்டை நீதவான் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

தான் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் பங்குபற்றிய பின் தனது சினேகிதனான பாதிய ஜயகொடியுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற போது சந்தேகநபர் தன் வழியை மறித்து கையை பிடித்து இழுத்ததாகவும் உமாரியா சிங்கவன்ஸ கொழும்பு கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சந்தேகநபர் பற்றி தான் முன்னரும் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் அவருக்கு எதிராக  வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கை கவனத்தில் எடுத்த நீதவான் கனிஷ்க விஜேரத்ன சந்தேகநபரை எதிர்வரும் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X