2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ள நிவாரண பொருட்களை சேகரிக்கும் விவேகானந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்களை சேகரிக்க கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் முன்வந்துள்ளது.

அதற்கமைய உலர் உணவுப் பொருட்களை வழங்க விரும்பும் நலன்விரும்பிகள் அவற்றை 29.12.2012 சனிக்கிழமை முதல் 04.01.2013 வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்குமிடையில் கொழும்பு-13, புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள கல்லூரியில் கையளிக்கலாம் என பழைய மாணவர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 0776600993, 0755222888, 0777894460 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X