2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

காரி ஹாபிஸ் ரிப்தி முஹம்மது ரிப்கான் நீதி அமைச்சரினால் கௌரவிப்பு

Super User   / 2013 ஜனவரி 02 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றி பெற்ற காரி ஹாபிஸ் ரிப்தி முஹம்மது ரிப்கான் நேற்று நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரஊப் ஹக்கீமால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். 

கலாநிதி ரி.பி. ஜாயா நினைவுச் சொற்பொழிவு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு, முஸ்லிம் மகளிர் கல்வி வட்டத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சருமான ரஊப் ஹக்கீம் - காரி ஹாபிஸ் ரிப்தி முஹம்மது ரிப்கானுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தார்.

இதன்போது, கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் அதிபராக மறைந்த கலாநிதி ரி.பி. ஜாயா பதவி வகித்த காலத்தில் அவரது மாணவர்களாக இருந்த சிலரும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X