2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

'கருவாடு' 'கிழங்கு' முதலாளிகளுக்கு சிறை

Kanagaraj   / 2013 ஜனவரி 03 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாவனைக்கு உதவாத கருவாடு மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை வைத்திருந்த முதலாளிகளுக்கு மாளிகாகந்த நீதவான் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

அத்துடன் அந்த இரு விற்பனை நிறுவனங்களுக்கும் ஒரு இலட்சம் மற்றும் 10 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

பாவனைக்கு உதவாத உருளைக்கிழங்கு 8500 கிலோவும் கருவாடு 2000 கிலோவும் வர்த்தக சந்தைக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்தவேளையில் நுகர்வோர் அதிகாரசவை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டது.

புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத்தெருவிலுள்ள இரண்டு விற்பனை நிறுவனங்களிடமிருந்தே பாவனைக்கு உதவாத குறித்த பொருட்கள் அண்மையில் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0

  • ibnuaboo Thursday, 03 January 2013 06:33 AM

    அப்போ இனி அவர்களுக்கு கருவாடும் கிழங்கும்தான் சாப்பாடா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X