Kanagaraj / 2013 ஜனவரி 19 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளை- கல்கிஸை பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் சஜிந்திர ரமல் டி சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை- கல்கிஸை மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தினார். என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினரை பொலிஸார் கல்கிஸை மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தொன்றில் சிக்கி களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago