2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் இருவர் பலி

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 23 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.என்.முனாஷா

கட்டானை, கந்தவல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

வில்பிரட் மாரக் பெர்னாந்து (வயது 65), சித்மி நடாசா (வயது 14) ஆகியோரே இவ்விபத்தில் மரணமடைந்தவர்களாவர்.

மோட்டார் சைக்கிளொன்றும் டீமோ ரக லொறியொன்றும் மோதியே இவ்விபத்து சம்பவித்ததாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த 7 வயதுச் சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையின்  அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லொறியின் சாரதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X