
-நவரத்தினம் கபில்நாத்
வடமாகாணத்தில் நிலவும் வைத்தியர், தாதிய உத்தியோகத்தர், துணைமருத்துவ உத்தியோகத்தர்களுக்கான தட்டுப்பாடுகள் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள மத்தியசுகாதார அமைச்சில் நேற்று (02) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மாகாண சுகாதார சேவைகள் முன்னேற்றப்பட அவசியமென வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் சிநேகபூர்வமான இந்த சந்திப்பில் மாகாண சுகாதார சேவையை மேம்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, வடமாகாண சுகாதார அமைச்சரிற்கு தெரிவித்தாகவும் ஊடக பிரிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடமாகாண சபை பொறுப்பேற்றபின்னர் மாகாண அமைச்சர் ஒருவர், மத்திய அமைச்சரை சந்தித்தது இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சந்திப்பில் வடமாகான சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன்இமாகாண சுகாதாரப் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஜூட் மற்றும் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ப.சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.JPG)