2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

தளுப்பத்தையில் உணவகம் தீக்கிரை

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 05 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்


நீர்கொழும்பு, தளுப்பத்தை பிரதேசத்திலுள்ள உணவகமொன்றில்;  சமையல் எரிவாயு கசிந்ததால், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அந்த உணவகம் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,  நீர்கொழும்பு மாநகர சபையின் தீ அணைப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

புதிதாக திறக்கப்பட்ட 'சென்வில் பூட்; ரெஸ்ட்டூரன்ட்' என்ற உணவகத்தின்; சமையலறையில் தீ பரவியுள்ளது. எரிவாயு  சிலின்டருக்கான குழாயிலிருந்து எரிவாயு கசிந்த நிலையில்,  எரிந்துகொண்டிருந்த அடுப்பின் மூலமாக தீ  பரவியதாக விடுதியின் உரிமையாளரும் ஊழியர்களும் தெரிவித்தனர்.

இதன்போது எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

உணவுப் பொருட்கள், குளிர்சாதனப் பெட்டிகள், காற்றாடிகள், மேசைகள், சமையலறை உபகரணங்கள் என்பன எரிந்து  நாசமாகியுள்ளன.
இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X