2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

வெளிநாட்டவரின் வீட்டில் கொள்ளை; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 17 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு, பசியவத்தை பிரதேசத்திலுள்ள வெளிநாட்டவர் ஒருவரின் வீட்டில் இரண்டாவது தடவையாகவும் 400,000 ரூபா பெறுமதியான பொருட்களை அண்மையில் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான ஒருவரை நேற்று வியாழக்கிழமை கைதுசெய்ததாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் தொலைக்காட்சிப்பெட்டி, தங்கநகைகள், கணினி, மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை இவரிடமிருந்து கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

போதைப் பாவனைக்கு அடிமையான இவர், கொழும்பின் சில பிரதேசங்களில் கொள்ளையிட்டமைக்காக சிறைத்தண்டணை விதிக்கப்பட்டவரென விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரை நீதமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காமினி அல்லவவின் பணிப்பின் பேரில் செயற்பட்ட பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைதுசெய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X