2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மாலைத்தீவு ஜனாதிபதி - அமைச்சர் றிசாத் சந்திப்பு

Super User   / 2014 ஜனவரி 21 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள மாலைத்தீவின் புதிய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூமிற்கும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீனிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக செயற்பாடுகள் தொடர்பில் இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டன.இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் வர்த்தக தொடர்பாடல் மீளாய்வு மற்றும் வர்த்தக ஆணைக்குழு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

மாலைத்தீவின் பொருளாதாரம் உள்ளிட்ட இன்னோரன்ன விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் இலங்கையில் புதிய முதலீடுகள் பற்றியும் உல்லாச பயணத் துறைக்கான இன்னோரன்ன வசதிகள் மேம்பாடு பற்றியும் கருத்துப்பறிமாறப்பட்டன.

இந்த சந்திப்பின்போது அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, கைத்தொழில் மற்றும்  வர்த்தக துறை பிரதி அமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா, அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவர் பந்துல எகடகேயும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X