2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

சிகரெட்டுக்களை கடத்திய மூவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 28 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

சுங்கத்தீர்வை செலுத்தாமல் சட்டவிரோதமாக விமானம் மூலம் இலங்கைக்கு 96,000 சிகரெட்டுக்களை கடத்திய குற்றச்சாட்டில் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட மூவருக்கு நீர்கொழும்பு மேலதிக நீதவான் ஐ.எம்.ஐ.பண்டார ஒன்பது இலட்சத்து ஆறாயிரம் ரூபா அபராதம் விதித்தார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை  இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களின் பயணப்பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி சிகரெட்டுக்களை கைப்பற்றியதுடன், மேற்படி சந்தேக நபர்கள் மூவரையும் கடந்த சனிக்கிழமை கைதுசெய்ததாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த அமீர்  ஜௌபர் முஹம்மத், நிசார் முஹம்மத் ஸப்ரின், முஹம்மத் சலீம் முஹம்மத் அஸ்ரப் ஆகியோரே கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.

இவர்கள் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X