2025 மே 07, புதன்கிழமை

அரசியல் பதவிகள் தற்காலிகமானது: மனித நேயமே நிரந்தரமானது

Kogilavani   / 2015 நவம்பர் 25 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இசெட்.சாஜஹான்

'நான் நீர்கொழும்பு மேயராக பதவியேற்று நான்கு வருடங்களாகின்றது.    இன்னும் சிறிது காலத்தில் மாநகர சபையின் ஆட்சி காலம் முடிவடையப்போகிறது. அரசியல் பதவிகள் தற்காலிகமானது. மனித நேயமே நிரந்தரமானது' என நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர கூறினார்.

நீர்கொழும்பு பிரதி மேயராக தயான் லான்ஸா நேற்று  செவ்வாய்க்கிழமை(24), பதவியேற்று கொண்டார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

இந்நிகழ்வு நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் மேல் மாகாண சபை அமைச்சர் நிமல் லான்ஸா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'பதவிகள் இறைவனுடைய நாட்டம் மற்றும் அதிஷ்டத்தின் அடிப்படையில் கிடைப்பதாகும். அரசியல்வாதிகள் மனித நேயத்தை பேண வேண்டும். என்னையும் பிரதி மேயர் தயான் லான்ஸாவையும் வீழ்த்த சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. தயான் லான்ஸா அவரது சகோதரரான மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்ஸாவை பின்பற்ற வேண்டும். நிமல்லான்ஸா  தனக்கெதிராக எழுந்த தடைகளை அமைதியான முறையில் வெற்றிகொண்டவர்' என்றார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X