Princiya Dixci / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, மாவட்ட அபிவித்திக் குழு இணைத் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நேற்று வியாழக்கிழமை (11) பிற்பகல் குவைட் நாட்டுக்கான விஜயம் மேற்கொண்டுள்ளார்.
குவைட் நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சி கிளையினரின் அழைப்பின் பேரிலேயே இரண்டு நாள் விஜயமொன்றிணை மேற்கொண்டிருக்கும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. இன்று மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது, குவைட்டில் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள கட்சியின் விரிவாக்கல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
அத்துடன், முஜிபுர் ரஹ்மான் முன்னெடுக்கும் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு குவைட்டில் இயங்கும் ஐ.தே.க.வினர் உதவிகளை மேற்கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகொரலவுக்கும் குவைட் நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சிக் கிளையினர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

16 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
16 minute ago
1 hours ago