2025 மே 07, புதன்கிழமை

எல்லை நிர்ணயத்தை நிறைவு செய்யலாம்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மொஹொமட் ஆஸிக்

உள்ளூராட்சிமன்ற தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு ஏதுவான எல்லை நிர்ணயங்களை ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்தார். 

கபே இயக்கம், கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (08) ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள மனுக்கள் அனைத்தையும் பரிசீலித்து பொருத்தமான தீர்வுகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். இரட்டைத் தொகுதிகளை உருவாக்குவதில் பாரிய சிரமங்கள் உள்ளன. இன ஒற்றுமை ஏற்படும் விதத்தில் அனைத்து இனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இவ் இரட்டைத் தொகுதிகள் நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X