Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 24 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு தூவ பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு காரணமாகவும் கடல் நீர் வீடுகளுக்குள் உட் புகுவதன் காரணமாகவும் அப்பகுதியிலுள்ள 50 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடற்கரையோரத்தில் போடப்பட்டுள்ள கருங்கற்பாரைகள், சில இடங்களில் கடலில் அல்லுண்டு போயுள்ளதால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பிரதேசவாசிகள் சிலர் கூறியதாவது,
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு கடலிலிருந்து பாரிய அளவில் மணல் அகழ்வு மெற்கொள்ளப்பட்டது. இதன் பின்னரே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வீடுகளுக்குள் கடல் நீர் புகுவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.
அத்துடன், பெருமளவு பகுதிகளை இன்று கடல் ஆக்கிரமித்துள்ளது. ஒரு பக்கம் கடல் மறுபக்கம் களப்பு உள்ளது. இந்த இரண்டுக்கும் இடையில் 30 மீற்றர் வரையான இடைவெளியே காணப்படுகிறது. இந்த முப்பது மீற்றர் பகுதியிலேயே, எமது வீடுகள் கடலோரத்தை அண்மித்ததாக அமைந்து உள்ளன என்றும் தெரிவித்தனர்.
கருங்கற்பாரைத் தடைகளை ஏற்கெனவே உள்ள தடைகளுக்கு மேல் உயர்த்தி, உடைந்துள்ள தடைகளை சீர்செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர்கள், இரவில் உறங்குவதற்கு பயமாக உள்ளதாகவும் கவலை தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago
3 hours ago
3 hours ago