Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2021 மே 10 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால், கல்வியமைச்சில் பாடசாலை நடவடிக்கைகள் பிரிவு உள்ளிட்ட ஆறு பிரிவுகள் மூடப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றாளர்கள் மற்றும் தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்கள் இனங்காணப்பட்டமையால், இந்த ஆறு பிரிவுகளும் மூடப்பட்டுள்ளன என கல்வியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்ட பிரதேசங்களில், கல்வியமைச்சில் கடமையாற்றும் பணியாளர்கள் பலர் உள்ளனர். இதனால், கல்வியமைச்சின் செயற்பாடுகள் பல, முடங்கியுள்ளன என்றும் அவ்வதிகாரி தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கல்வியமைச்சின் செயற்பாடுகளை, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் ஆகக்கூடுதலாக செயற்படுத்துவதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். அதனடிப்படையில் விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அந்த அதிகாரி, மூடகப்பட்ட பிரிவுகளின் செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2025