2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

களுத்துறையில் பதற்றம்: படையினர் களமிறக்கம்

Editorial   / 2023 ஒக்டோபர் 09 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தடைச் சட்டத்தை கிழித்தெறியும் சமூக ஊடக அடக்குமுறைச் சட்டத்தை நீக்கும் நோக்கில்  களுத்துறை நகரில் திங்கட்கிழமை (09) ஆரம்பிக்கப்படவுள்ள மக்கள் பேரவையின் எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக களுத்துறை நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். .

களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பொலிஸ் நிலையங்களில் இருந்து கலவர எதிர்ப்பு குழுக்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் காணப்பட்டனர்.

தலவ்வ, போதி வளாகம் மற்றும் இரண்டு களுத்துறை பாலங்களுக்கு இடையில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமை உட்பட பல இடங்களில் பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவப் படையினர் களுத்துறை நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X