2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சைவப்பெரியாருக்கு கொழும்பில் அஞ்சலி

Editorial   / 2023 மே 08 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

விக்கி

 தமிழ்நாட்டின் திருநகரமாம் நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பல சைவசமய பெரியார்கள் இலங்கை நாட்டில் தமிழும், சைவமும் தலைத்தோங்க தொண்டுகள் பல ஆற்றிவருகின்றனர்.

அமரர்களான எ.எஸ். சங்கரலிங்கம்பிள்ளை, ஜெய கணபதியார்பிள்ளை, வி.டி.வி. தெய்வநாயகம் பிள்ளை, ஜி.எஸ். விஸ்வநாதபிள்ளை, க.சி. சிவசங்கரபிள்ளை, எ.எஸ். சோமசுந்தரம்பிள்ளை ஆகியோர் இலங்கை திருநாட்டில் ஆற்றிய சமய சமூக கலை இலக்கிய பணிகளை இலங்கை வாழ் மக்கள் என்றும் நினைவுகூறுவர்.

 அந்தவரிசையில் 'நவதிருப்பதி' என்று அழைக்கப்படும் புனித புண்ணிய ஊர்களில் ஒன்றான திருக்கருவூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் மாணிக்கம்பிள்ளை அண்ணாச்சியும் குறிப்பிடத்தக்கவர். இவரை பரிஏறும் பெருமாள் பிள்ளை எனவும் சிறப்பித்துக்கூறுவர்.

இவரது தந்தையார் சைவசமயத் தொண்டாற்றிய அமரர். ஆர்.ஏம். ரெங்கநாத பிள்ளை என்பவராவார். இவர் கதிர்காமம் சடையம்மா மடம், மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலம், நல்லை ஆதீனம், கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணியம் ஆலயம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டு சமய சமூகப்பணிகளை மேற்கொண்டவராவார்.

அமரர் பரிஏறும் பெருமாள் பிள்ளை (மாணிக்கம்பிள்ளை) அவர்களும் தமது தந்தையார் வழியில் நின்று அவர் விட்டுச்சென்ற அன்னதானப் பணிகளையும், சமயத்தொண்டுகளையும், தளர்வடையாது தொடர்ந்தும் பலதசாப்தகாலமாக ஆற்றிவந்தவராவார்.

அமரர் மாணிக்கம்பிள்ளை அவர்களின் மகத்தான சேவையாகிய கொழும்பு சைவ வேளாளர் சமூகத்தினரின், குடும்ப உறுப்பினர்கள் அமரத்துவம் அடையும் போது இறுதிக்கிரியைகளையும், அதனோடு தொடர்புடைய சமய சம்பிரதாயங்கள், சடங்காசாரங்கள் அனைத்தையும் முன்னின்று நடாத்திய பெருமகன் ஆவார்.

இந்த உயர்ந்த மனித நேயத்தொண்டை என்றும் எவராலும் மறக்க முடியாது. எனவே அவர் மறைந்து வைகுண்டபிராப்தி அடைந்து ஓராண்டு பூர்த்தியை எதிர்வரும் 13ம் திகதி சனிக்கிழமை (13.05.2023) கொழும்பு கொட்டாஞ்சேனை வரதராஜர் விநாயகர் ஆலய ஐங்கரன் மண்டபத்தில் மாலை 5 மணிக்கு இவரது சேவை நலனை நினைவுகூர்ந்து அஞ்சலி கூட்டம் நடைபெறும்.

கொழும்பில் சமய சமூகப்பணிகளை கல்விப்பணிகளை ஆற்றிவரும் வி.டி.வி அறக்கட்டளையினர் இந்த புனித அஞ்சலி கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளனர்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவரது சமயசமூகப் பணிகளை நினைவுகூர்ந்து அமரர். மாணிக்கம்பிள்ளை அண்ணாச்சி அவர்களுக்கு கரம்கூப்பி சிரம்தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோமாக.

ஓம் சாந்தி!  ஓம் சாந்தி!  ஓம் சாந்தி! 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .