2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

தந்தை, மகள் மீது அமிலத் தாக்குதல்

Editorial   / 2023 ஒக்டோபர் 11 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசிட் வீச்சுத் தாக்குதலில் தந்தையும் மகளும் காயமடைந்துள்ள சம்பவமொன்று முல்லேரிய, அம்பத்தளை பகுதியில் புதன்கிழமை (11) காலை முல்லேரிய பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகளும் இந்த அமிலத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் நின்றிருந்த ஒருவரால் இந்த அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த தந்தை, கொழும்பு கண் வைத்தியசாலையிலும் மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X