Princiya Dixci / 2015 நவம்பர் 03 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்டசியின் கீழ், ஊழல் மோசடிகளற்ற தலைசிறந்த உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான இலக்கு. எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கொழும்பு மாநகர சபை வெற்றி வாகை சூட்டிக்கொள்வது திண்ணம் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் எச்.எம். மன்ஸிவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் கிறேண்பாஸ் - கம்கருபுர வீடமைப்புத்திட்ட நுழைவாயிலுக்கு அருகில் அண்மையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட பாதையொன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த காலத்தில் சிறுபான்மை இன மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து தூர விலகிச் சென்றனர். அப்போதைய அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வின் தாக்கம் தான் என்று கூற வேண்டும். ஆனால், தற்போது நல்லாட்சியின் கீழ் எமக்கு நல்லதொரு நாட்டுத் தலைவர் கிடைத்துள்ளார். இது நாம் பொற்றுள்ள மிகப் பெரிய வரப்பிரசாதமாகும்.
தற்போதைய ஜனாதிபதி சாதி, மத, குல போதங்களுக்கு அப்பாற்பட்டவர். எனவே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து தூர விலகிச் சென்றுள்ள மக்களை மீண்டும் ஒன்றுபடுத்தி, ஜனாதிபதி தலைமையின் கீழ் எமது கூட்டமைப்புக்குள் இணைத்துக கொள்வதே எமது பிரதான நோக்கமாகும்.
நாம் அனைவரும் இலங்கை வாழ் மக்கள். உண்மையான வெற்றியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அனைவரும் தேசிய சிந்தனையூடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இன்று உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் மிக மோசமான கருத்துக்கள் வெளியாகியவண்ணமுள்ளன. இதனை நாம் மாற்ற வேண்டும். எதிர்காலத்தில் இது தொடர்பில் தெளிவான விளக்கங்களை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
12 minute ago
25 minute ago
33 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
33 minute ago
34 minute ago