Kogilavani / 2015 நவம்பர் 01 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இசெட்.சாஜஹான்
மோட்டார் சைக்கிளில் வரும் இனந்தெரியாத நபர்களால், வீதிகள் மற்றும் ஒழுங்கைகளில் தனியாகச் செல்லும் யுவதிகள், மாணவிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தளுபத்தை, பல்லனசேனை வீதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிளில் தனித்து அல்லது இருவராக சேர்ந்து பயணிக்கம் இனந்தெரியாத நபர்கள், வீதியில் தனியாகச் செல்லும் யுவதிகள் மற்றும் மாணவிகளை பின்தொடர்ந்து செல்வதுடன் திடீரென்று அவர்களை இழுத்துவிட்டு அல்லது அங்கங்களைத் தொட்டுவிட்டு தப்பிச் செல்கின்றனர்.
கடந்த வாரம் தனியார் வகுப்புக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த 13 வயது மாணவியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த நபரொருவர் அம்மாணவியின் கைகளை பிடித்து இழுத்துள்ளார். அம்மாணவி கூக்குரல் இட்டதை தொடர்நது குறித்த நபர் தப்பிச்சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் அம் மாணவியின் பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதேபோன்று மோட்டார் சைக்கிளில் வரும் இனந்தெரியாத நபர்கள் பெண்களின் தங்கச் சங்கிலிகளை அபகரித்துச் செல்வதும் இப்பகுதியில் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இச்சம்பங்களை கட்டுப்படுத்துவதற்கு உரியவர்கள் முன்வரவேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
12 minute ago
25 minute ago
33 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
33 minute ago
34 minute ago