2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்குளிய படுகொலை: ஐவர் கைது

Editorial   / 2023 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் நபர் ஒருவரை ஆயுதத்தால் குத்திக் கொன்றதாக கூறப்படும் தனியார் வகுப்பு  ஆசிரியர், பாடசாலை மாணவர் மற்றும் வர்த்தகர் உட்பட ஐவரை  மட்டக்குளிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்குளியைச் சேர்ந்த ஆர். ஆர். எம் பீரிஸ் என்ற 36 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த 25 ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் குத்திக் கொல்லப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் பின்னர் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவரின் தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .