Gavitha / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தணை நிலையத்தில், விநியோகிக்கப்படாத பதிவுத் தபால்கள், சுமார் ஒரு இலட்சம் வரை குவிந்து கிடக்கின்றன என்று தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தபால்களை விநியோகிப்பதற்கான இரண்டாம் வகுப்பு தபால்காரர்களுக்கான பதவி வெற்றிடங்கள் அதிகமாக உள்ளமையினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மற்றும் பிற நகர்களுக்கான தபால்களை விநியோகிக்கும் பொறுப்பு, மத்திய தபால் பரிவர்த்தணை நிலையத்திடமே உள்ளது. இதேவேளை, இந்த நிலையம் வெளிநாட்டிலுள்ள வாடிக்கையாளர்களினால் இணையத்தளம் மூலம் கொள்வனவு செய்யப்படும் பொருட்களை, வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பையும் கொண்டுள்ளது.
இந்த நிலைமை காரணமாக, குறித்த இரண்டாம் நிலை தபால்காரர்களுக்கான நேர்முகப்பரீட்சைக்கு அனுப்ப வேண்டிய கடிதங்களும் தாமதமாகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
7 minute ago
9 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
4 hours ago