Editorial / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டி கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹோமகம பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீதே, சந்தேகநபர் மேற்கண்டவாறு செய்துள்ளார்.
மரணமடைந்த அந்த பிச்சைக்காரன், அந்த ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் “நீ குளிக்கமாட்டீர் இல்லையா? குளிக்காவிட்டால் தீ வைப்பேன்” என பலமுறை அந்த சந்தேநபர் கூறியுள்ளார். அதேபோல, ஞாயிற்றுக்கிழமை (29) இரவு பெற்றோலை ஊற்றி கொளுத்திவிட்டார்.
விபரீதத்தை கண்ட அங்கிருந்தவர்கள், பிச்சைக்காரனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர் திங்கட்கிழமை (30) காலை மரணமடைந்தார்.
64 வயதான தர்மதாஸ என்பவரே மரணமடைந்துள்ளார். சந்தேகத்தின் பேரில் 27 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .