2025 மே 07, புதன்கிழமை

ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்துக்கு முஸ்லிம் ஜமாஅத் உதவி

Thipaan   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு கல்வி வலயத்தின் கட்டானை கோட்டக் கல்விப் பிரிவில் அமைந்துள்ள  வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்துக்கு  இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் பிரிவு இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான உதவிகளை செய்து கொடுத்துள்ளது.

பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கிவரும் இந்த பாடசாலைக்கு அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்த்தர்கள் நேரடியாக விஜயம் செய்து குறைபாடுகளை பாடசாலை அதிபரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் உதவிகள் பலவற்றை செய்வதற்கு முன்வந்தனர்.

அதன்படி, பாடசாலையின் ஆரம்ப பிரிவில்  பழுதடைந்த நிலையில் காணப்பட்ட நிலப்பகுதி சீமெந்திட்டு புனரமைப்பு செய்யப்பட்டது. அத்துடன் ஆரம்ப பிரிவின் உடைந்த நிலையில் காணப்பட்ட ஜன்னல் பகுதிகளுக்கு இரும்புக் கம்பியில் சட்டங்கள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக முழுப் பாடசாலைக்கும் வர்ணப்பூச்சு அடிக்கப்பட்டது. அத்துடன் அதிபர் காரியாலயத்திற்கு தேவையான கதிரை, மேசை மற்றும் பிளாஸ்ரிக் கதிரைகள், வகுப்பறைக்குத் தேவையான காற்றாடிகள் என்பனவும் அந்த அமைப்பினால் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானிலிருந்து இலங்கை வந்து ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவத்தினூடாக வெளிநாடுகளுக்கு தஞ்சம் கோரியுள்ள அஹ்மதி பாகிஸ்தானிய ஆண்கள் சிலர் அஹ்மதி  பெண்கள் அமைப்பினால் செய்யப்பட்ட மேற்படி சமூக சேவை வேலைத்திட்டத்துக்கு தமது சிரமத்தின் மூலமாக உதவி புரிந்துள்ளனர்.

அவர்கள் நிறப்பூச்சு பூசுதல், பழுதடைந்த இடங்களுக்கு சீமெந்திடல் போன்ற வேலைகளை (கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையான காலப்பகுதியில்) இலவசமாக செய்து கொடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X