2025 மே 07, புதன்கிழமை

வசூலிக்க சென்றவர் மீது தாக்குதல்: ஒருவருக்கு வலைவீச்சு

Gavitha   / 2015 நவம்பர் 26 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்கிக்கு செலுத்த வேண்டிய மாதத்தவணைக் கட்டணத்தை வசூலிப்பதற்காகச் சென்ற வங்கி ஊழியரை, பெண்ணொருவர் தாக்கிய சம்பவம் சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் புதன்கிழமை (25) இடம்பெற்றுள்ளதாகவும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணொருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தின் போது, தாக்குதலுக்குள்ளான வங்கி ஊழியர், தற்போது சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பெண் தப்பிச் சென்று விட்டதாகவும் இவரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X