2025 மே 07, புதன்கிழமை

வத்தளையில் தமிழ் பாடசாலை கட்டாயம்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

கம்பஹா, வத்தளை பிரதேசத்தில் தமிழ் பாடசாலையின் தேவையை நான் நன்கு அறிவேன். அப்பிரதேசத்திலிருந்து தலைநகரை நோக்கிவரும் பாடசாலை அனுமதி சம்பந்தமாக நான் பல இன்னலுக்குள்ளாகியுள்ளேன். வத்தளை பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு நிரந்தரமாக தமிழ் பாடசாலை அமைய வேண்டும் என்பது எனது கனவாகும் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார். 

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகது, 

இன்று வத்தளை பிரதேசத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் மூலமாக இப்பிரதேசத்துக்கு தமிழ் பாடசாலை அமைப்பதற்கு முன்னாள் மாநகரசபை உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் தர்மரட்ணம் நற்பணிமன்றத் தலைவர் பிரகாஷ் போன்றவர்களின் முயற்சியின் மூலமாக அமைச்சர் ஜோன் அமரதுங்க முன் முயற்சி எடுக்கும் இவர்களது செயற்பாட்டிற்கு எனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன். 

கடந்த காலங்களில் மேல் மாகாணசபை முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே இருந்த பொழுது அவரைஅழைத்து வந்து தமிழ் பாடசாலையின் பிரதேசத்தை அடையாளப்படுத்தியவன் நான். 

இருப்பினும் சில குறுகிய நோக்கம் கொண்ட அரசியல்வாதிகள் அப்பாடசாலை அமைவதில் போட்டா போட்டி போட்டு குலறுபடி செய்தன் மூலமாக எனது முயற்சிகள் தடைப்பட்டன. சிலர் தான்தான் எதனையும் செய்யவேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் வத்தளை தமிழ் பாடசாலை அமைப்பதில் இடையூறுகளை ஏற்படுத்தினர். எனினும், இன்று அரசியல் ரீதியாக இதனைத் தடுக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X