Editorial / 2021 ஜூன் 20 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வத்தளை, ஹேகித்த பிரதேசத்திலுள்ள பாரிய இரும்பு உற்பத்திச் செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் 128 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
“முன்னெடுக்கப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் போதே, இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது” என, வத்தளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் மக்கள் சுகாதார பரிசோதகர் வருண அமரசேகர தெரிவித்துள்ளார்.
அங்கு பணியாற்றும் ஊழியர்களில் 194 பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. என்பதுடன், அந்த கைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் 92 பேர் இந்தியப் பிரஜைகள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, அந்த இரும்பு கைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இனங்காணப்பட்டவர்கள் கிசிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர், அந்த கைத்தொழிற் சாலைக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பிரபல்யம் வாய்ந்த நிறுவனத்தின் இணை நிறுவனமாக, இந்த தொழிற்சாலை கடந்த பல வருடங்களாக, வத்தளை-ஹேகித்த பிரதேசத்தில் இயங்கிவருகின்றது.. ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியப் பிரஜைகள் என்பதும் இங்கும் குறிப்பிடத்தக்கது.
30 minute ago
37 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
2 hours ago
05 Nov 2025