Princiya Dixci / 2015 நவம்பர் 17 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை, ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம், கொழும்பு - 07 இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் முதல் அமர்வில் கல்லூரியின் காலஞ்சென்ற முன்னாள் அதிபரும் மூத்த கல்விமானுமான மர்ஹூம் எஸ்.எச்.எம். ஜெமீலின் நினைவுப் பேருரையும், மலர் வெளியீடும் இடம்பெறவுள்ளது.
இதன் இரண்டாவது அமர்வில் கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெறும். இந்நிகழ்வுக்கு, கல்லூரியின் பழைய மாணவரும் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சரும், ஸ்ரீP லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் கொழும்பு வாழ் பழைய மாணவர்கள் அனைவரையும் இதில் கலந்து சிறப்பிக்குமாறு பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளைஅழைப்பு விடுத்துள்ளது.
6 minute ago
8 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
4 hours ago