2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடக்கில் நீர் விநியோகத் திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 10 பில்லியன் ரூபா கடனுதவி

A.P.Mathan   / 2010 நவம்பர் 20 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச நீர் விநியோகத் திட்டங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி பத்து பில்லியன் ரூபா கடனுதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.

நீர் விநியோகம் மற்றும் சுகாதார நலன்களை மேம்படுத்துவதற்காக இந்தப் பணம் பயன்படுத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 300,000 புதிய நீர் விநியோக இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீர் விநியோகத் திட்டத்திற்காக 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X