2025 மே 17, சனிக்கிழமை

யாழில் அவசர மருத்துவ அம்பியுலன்ஸ் சேவை தொலைபேசி இல. 110 அறிமுகம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 08 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் அவசர மருத்துவ அம்பியுலன்ஸ்  சேவையை தொடர்பு கொள்ள புதிய இலகுவான தொலைபேசி இலக்கம் 110 அறிமுகப்படுத்தப்பட்டது. அவசர அம்பியுலன்ஸ் சேவை தொடர்பாடல்களை ஒருங்கிணைக்க பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் அவசர அழைப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

இங்கு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் உத்தியோகத்தர்கள் பயிற்சியின் பின் பணிக்கமர்த்தப்பட்டனர். எனினும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சில வலையமைப்புகளில் தொலைபேசி இலக்கம் 110 அழைக்கும்போது அநுராதபுரத்திற்கு அழைப்பு செல்வதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எனவே அவசர மருத்துவ அம்புன்ஸ் சேவையை அழைப்பதற்கு  தொலைபேசி இலக்கம் 110 ஜ அழைக்கவும் அல்லது 021 - 222 5555 என்ற இலக்கத்துடனும் தொடர்புகொண்டு அவசர மருத்துவ அம்புன்ஸ் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .