2025 மே 17, சனிக்கிழமை

யாழ். பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை வரை 46.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி

Super User   / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து இன்று திங்கட்கிழமை காலை 10 மணி வரை 46.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பெறப்பட்டுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவிதத்து.

இச்சீரற்ற காலநிலை யாழ். பிரதேசத்தில் எதிர்வரும் தினங்களில் கடும் காற்றுடன் கூடிய மழை வீசக்கூடிய சாத்தியம் இருப்பதாவும் வானிலை அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது.

இக்காற்று மழையுடன் 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வேகத்தில் ஆரம்பித்து 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரிக்க கூடிய நிலைமைகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இடியுடன் கூடிய மழை வடக்கு, கிழக்கு, மற்றும் தெற்கு, தென்கிழக்கு, ஆகிய பகுதிகளில் இக்காலநிலை காணப்படும் என்றும் இதனால் கடற்கரைப் பிரதேசங்களில் வாழும் மக்கள் கடற்கொந்தளிப்புக் காரணமாக விழிப்புடன் செயற்பாடும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும், வானிலை அவதானிப்பு நிலையமும் அறிவுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .