2025 மே 19, திங்கட்கிழமை

ஜேர்மன் பிரஜையை திருமணம் முடிப்பதாக கூறி 15 இலட்சம் ரூபா பெற்று ஏமாற்றியதாக பெண் மீது வழக்கு

Super User   / 2012 ஜூலை 04 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜே.டானியல், ரஜனி)

தன்னைத் திருமணம் முடிப்பதாக கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜேர்மன் பிரஜையிடம் 15 இலட்சம் ரூபாவை பெற்று ஏமாற்றியதாக கூறப்படும் பெண்ணுக்கு எதிராக விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் யாழ். நீதிவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் அரியாலையைச் சேந்த அப்பெண், அதே இடத்தைச் சேந்தவரும் ஜேர்மன் பிராஜாவுரிமை கொண்டவருமான நபரை திருமணம் முடிப்பதாகக் கூறி 15 இலட்சம் ரூபாவை வாங்கி ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அப்பணத்தை பெற்றுத் தருமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை ஏற்றுக் கொண்ட யாழ். நீதிவான் நீதிமன்றம், குறித்த பெண்ணை வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ். நீதிவான் நீதிமன்றுக்கு வருமாறு அழைப்பாணை  விடுத்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X