2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். தனியார் காணிகளில் தங்கியுள்ள இராணுவத்தினர் 3, 4 மாதங்களில் முற்றாக வெளியேறுவர்: ஹத்துருசிங்க

Menaka Mookandi   / 2012 ஜூன் 20 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் தனியார் காணிகளில் குடியேறியுள்ள இராணுவத்தினர் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் முற்றும் முழுதாக வெளியேறி அரச காணிகளில் அமைக்கப்படும் முகாம்களில் குடியேறுவர் என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

யுத்த காலத்தில் பொதுமக்களின் இடங்கள் மற்றும் வீடுகளில் முகாமிட்டு தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை இராணுவத்துக்கு ஏற்பட்டிருந்தது.  இருப்பினும் யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக அவற்றில் 50 வீதமானவை மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

யுத்தத்துக்கு பின்னரும் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவத்தின் தொகை குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, எஞ்சியுள்ளவர்கள் தங்குவதற்காக அரசாங்க காணிகளில் முகாம்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
அதற்கான காணிகள் தெரிவுசெய்யப்பட்டு முகாம்கள் அமைத்து முடிப்பதற்கு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் தேவைப்படும். அக்காலப்பகுதிக்குள் தனியார் காணிகளிலிருந்து இராணுவத்தினர் முற்றும் முழுதாக வெளியேறுவர்.

இது தவிர, தனியார் காணிகளை ஆக்கிரமிக்க வேண்டிய தேவை படையினருக்கு ஒருபோதும் இல்லை. படையினர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என்று யாழ்.கட்டளைத் தளபதி மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0

  • nallavan Wednesday, 20 June 2012 08:25 AM

    கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கின்றது. நடந்தால் சரிதான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X