2025 மே 17, சனிக்கிழமை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2009இல் கைதான இளைஞன் விடுதலை

Menaka Mookandi   / 2012 மார்ச் 08 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2009ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி வவுனியா நலன்புரி நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று வியாழக்கிழமை யாழ்.மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.

குறித்த இளைஞன் விடுதலைப் புலிகளோடு தொடர்புகளைப் பேணி வந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் குறுக்கு விசாரணைக்கு வந்தது.

குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக பதிவு செய்யப்படவில்லை எனவும் குறித்த சந்தேக நபரின் சுய விருப்பத்தில் அது பெறப்படவில்லை என குறுக்கு விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

அதனால் அந்த வழக்கு தொடர்பான வேறு சான்று எதுவும் இல்லை என மன்றில் அரச சட்டத்தரணி திருக்குமரன் மன்றில் தெரிவித்தமையை அடுத்து யாழ்.மேல் நீதிமன்றத்தினால் இந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவ்விளைஞனை விடுதலை செய்யுமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.விஸ்வநாதன் உத்தரவிட்டார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞன் சார்பாக சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ் வாதாடினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .