2025 மே 19, திங்கட்கிழமை

போக்குவரத்து விதிகளை மீறிய நால்வருக்கு 29,000 ரூபா அபராதம்

Super User   / 2012 ஜூன் 20 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்பாண பிரதேசத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டர் வாகனம் செலுத்திய நான்கு பேரை யாழ். மற்றும் கோப்பாய் போக்குவரத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களை இன்று புதன்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, குற்றத்தை ஒப்புக்கொண்டதின் பிரகாரம் நால்வருக்கும் 29,000 ரூபா ஆபதாரம் செலுத்துமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச உத்தரவிட்டுள்ளார்

குறித்த நால்வரிடமும் சாரதி அனுமதிப்பத்திரம், வாகனக் காப்புறுதி பத்திரம் மற்றும் தலைக்கவசம் எதுவுமின்றி மோட்டர் வாகனத்தை செலுத்தியதாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X