2025 மே 19, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்புபட்ட 8பேர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூலை 12 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். கோப்பாய் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று எட்டுப் பேருக்கு மாறிமாறி விற்கப்பட்ட நிலையில் கோப்பாய் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி கோப்பாய் பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், பெண்ணொருவரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோட்டர் சைக்கிளைக் ஓட்;டிச்சென்ற பெண் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு அவரிடம் மேற்கொள்ளபட்ட விசாரணையின் போது இந்த மோட்டார் சைக்கிள் எட்டு பேருக்கு விற்பனை செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது.

இன்றைய தினம் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்த எட்டுப் பேரும் யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை தலா 40,000 ரூபா இரண்டு ஆள்பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X